கொரோனோவால் உயிரிழந்தவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் பாதிப்பு! இந்தியாவில் உயரும் எண்ணிக்கை!

கொரோனோவால் உயிரிழந்தவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும் பாதிப்பு! இந்தியாவில் உயரும் எண்ணிக்கை!


doctor-affected-by-coronovirus-in-india

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை பெற்று வருகின்றனர். மேலும் 3பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தடைசெய்யுமாறு அரசு கோரிக்கை விட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய நிலையில், கொரோனாவால்  பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடர்ந்து அவர் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் நபர் இவரானார்.

Coronovirus

இந்நிலையில் அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்து வந்த 63 வயது மருத்துவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மேலும் அவரது குடும்பத்தாரும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாநிலத்தில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.