இதுக்கெல்லாமா தற்கொலை செய்வாங்க..! கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்.. போலீஸ் விசாரணை..!do-you-want-to-commit-suicide-college-student-committed

மதுரை ஆனையூர் செந்தூர் நகரில் வசித்து வருபவர் பிரித்விராஜன். இவருக்கு 19 வயதில் லத்திகா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் லத்திகா செல்போனை அதிகமாக பயன்படுத்துவதாக கூறி அவரது தந்தை பிரித்திவிராஜ் அவரை பலமுறை கண்டித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று நீண்ட நேரமாக லத்திகா செல்போனை பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த தந்தை ப்ரித்விராஜன் கடுமையாக மகளை சாடியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த லத்திகா வீட்டில் உள்ள தனது அறையில் விஷ மாத்திரைகளை உண்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

By using a cell phone

இதனைக்கண்டு அதிர்ச்சடைந்த குடும்பத்தினர் லத்திகாவை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு லத்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தந்தை திட்டியதால் மகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.