இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்! மீறி செய்தால் கடும் தண்டனை!

இன்றைய தினத்தன்று மறந்துகூட இதனை செய்துவிடாதீர்கள்! மீறி செய்தால் கடும் தண்டனை!


Do not do these activities in pogi

போகிப் பண்டிகையின்போது எரிக்கப்படும் டயா், டியூப், நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் தீங்குகள் ஏற்படும். எனவே இதனை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தன்று முதல்நாள். மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையின்போது வீட்டில் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய மற்றும் தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Pogi

வழக்கமாக போகி பண்டிகை தினத்தன்று வீட்டில் உள்ள பழைய பொருட்கள், உபயோகமற்ற துணிகள் எரித்து கொண்டாடுவார்கள். இதில் டயர், டியூப்,  ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் இது போன்ற பொருட்கள் எரிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.


மேலும்,காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த போகி பண்டிகையை கவனமாக கொண்டாடுங்கள்.  இன்றைய தினத்தன்று மனதில் உள்ள தீய எண்ணங்களை தூக்கி வீசி நல்ல பண்புள்ள மனிதராய் வாழ்வோம்.