பார்க்கும்போதே மனசு பதறுது!! திமுக எம்.எல்.ஏ மகன் கார் விபத்தின் வைரல் சிசிடிவி வீடியோ காட்சி வெளியானது..

பார்க்கும்போதே மனசு பதறுது!! திமுக எம்.எல்.ஏ மகன் கார் விபத்தின் வைரல் சிசிடிவி வீடியோ காட்சி வெளியானது..


DMK MLA Praksh son car accident cctv video

கார் விபத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் பிரகாஷ். இவரது மகன் கருணாசாகர். 24 வயதான  கருணாசாகர் தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தின் அருகே அவர்கள் கார்சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த நடைபாதையின் மீது கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியநிலையில், காரில் பயணம் செய்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகன் கருணாசாகர் உட்பட அவரது 6 நண்பர்களும் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவரும்நிலையில், இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள விபத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.