தமிழகம்

அடித்து நொறுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார்.!

Summary:

dmk MLA car damaged

தூத்துக்குடி சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்பவர் செப்டம்பர் 17ஆம் தேதி கடத்தி கொலை ‌செய்யப்பட்டார். இதுகுறித்து தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர். 

இந்தநிலையில் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று நேரில்  சந்தித்து திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்து, போராட்டத்திலும் பங்கேற்றார். இந்த  நிலையில் அவரது சொந்த ஊரான தண்டபத்திலுள்ள வீட்டு முன்பு நின்றிருந்த அவரது காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Advertisement