சில ஆயிரம் மருத்துவர்களையே காக்க முடியாத அரசு, மக்களை எப்படி காப்பாற்றும்? ஸ்டாலின் கேட்ட நறுக் கேள்வி.!

சில ஆயிரம் மருத்துவர்களையே காக்க முடியாத அரசு, மக்களை எப்படி காப்பாற்றும்? ஸ்டாலின் கேட்ட நறுக் கேள்வி.!


DMK leader stalin question to tamilnadu CM

சில ஆயிரம் மருத்துவர்களையே காப்பாற்ற முடியாத அரசு பலட்சம் மக்களை எப்படி காப்பாற்றும் என திமுக தலைவர் ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் 1,629 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க அரசும், மருத்துவர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் போராடிவருகின்றனர்.

corono

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை அடிப்படையாக கொண்டு, மக்களை காக்கும் மருத்துவர்களுக்கே போதுமான வசதி செய்துதரமுடியாத இந்த அரசு பலட்சம் மக்களை எப்படி காக்கும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.