அரசியல் தமிழகம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக நிவாரண நிதி! தொகை எவ்வளவு தெரியுமா?

Summary:

Dmk given money for corona

கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

             

கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது என, திமுக அறிவித்துள்ளது.

இந்த நிவாரண நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


Advertisement