தமிழகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பயங்கரம்.! திமுக நிர்வாகி வெட்டிக்கொலை..!

Summary:

திருநெல்வேலி மாவட்டத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் செல்லத்துரை தனது கோழிப்பண்ணைக்கு  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்லதுரையை உடனடியாக மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Advertisement