தமிழகம்

தாய் - மகன் கொலை விவகாரத்தில் பகீர் திருப்பம்.. பாசமிகு கணவனுக்கு கள்ளகாதலால் பால் ஊற்றிய மனைவி.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.!

Summary:

தாய் - மகன் கொலை விவகாரத்தில் பகீர் திருப்பம்.. பாசமிகு கணவனுக்கு கள்ளகாதலால் பால் ஊற்றிய மனைவி.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.!

தோட்டத்து வீட்டில் தாய் - மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பேரதிர்ச்சி திருப்பமாக கள்ளகாதலுக்காக கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்த பெண், கள்ளக்காதலன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு, குருக்களையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவரின் தாயார் சௌந்தரம்மாள் (வயது 65). இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் நேற்று அதிகாலை நேரத்தில் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், நிகழ்விடத்தில் விசாரணையும் நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர், 10 மணிநேரத்திற்குள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 17 வயதுடைய 2 பள்ளி மாணவர்களும் இருக்கின்றனர். 

கொலை சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில், "செல்வராஜுக்கு திருமணம் ஆகி, சுபஹாசினி (வயது 35) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிக்கு தன்வந்த் என்ற 4 வயது மகனும் இருக்கிறார். செல்வராஜ் பைனான்ஸ் மற்றும் கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில், தோட்டத்தில் ஆடு மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார்.

தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தவாறு சௌந்தரம்மாள் தோட்ட வேலைகளை கவனித்து வந்துள்ளார். செல்வராஜ் பணத்தை வசூல் செய்ய கோபிகிருஷ்ணன் (வயது 28) என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார். தாய் - தந்தையை இழந்து வாழ்ந்து வந்த உறவினர் மகளான சுபஹாசினி மற்றும் அவரின் தங்கைக்கு அடைக்கலம் கொடுத்து கவனித்து வந்த சௌந்தரம்மாள், சுபஹாசினியை தனது மகனுக்கே கட்டிவைத்துள்ளார். 

பாசம் கொண்ட செல்வராஜும் மனைவியை அன்புடன் பார்த்து வந்த நிலையில், 12 ஆம் வகுப்பு மட்டுமே பயின்று இருந்த மனைவியை மேற்கொண்டும் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில், பைனான்ஸ் தொழிலை கவனித்து வந்த கோபாலகிருஷ்ணன் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்லும்போது, அவருக்கும் - சுபஹாசினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த தகவலை அறிந்த சௌந்தரம்மாள், தனது மகனிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கோபிகிருஷ்ணனை கண்டித்த செல்வராஜ், இனி நீ வீட்டிற்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளார். மேலும், கள்ளக்காதல் பழக்கத்தில் கோபிகிருஷ்ணனுக்கு ரூ.10 இலட்சம் கடனும் சுபஹாசினி வாங்கி கொடுத்துள்ளார். இதனால் கடன் தொல்லை எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளது. 

இதனால் கள்ளக்காதல் ஜோடி செய்வதறியாது திகைத்த நிலையில், செல்வராஜ் மற்றும் சௌந்தரம்மாளை கொலை செய்து சொத்துக்களை நமதுடையாக்கலாம் என திட்டம்போடப்பட்டுள்ளது. தடயம் இன்றி கொலை சம்பவத்தை அரங்கேற்ற, சம்பவத்தன்று கணவனுக்கு உணவில் மயக்க மருந்தை குறைந்தளவு கலந்து கொடுத்துள்ளார். இதனை அறியாத கணவனும் உணவை சாப்பிட்டு, தோட்ட வேலையை கவனிக்கலாம் என தோட்டத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது, மயக்கத்தில் உறங்கிக்கொண்டு இருந்த செல்வராஜ் மற்றும் தோட்ட வேலைகளை கவனித்து உடல் அயர்வில் உறங்கிக்கொண்டு இருந்த சௌந்தரம்மாள் ஆகியோரை கோபிகிருஷ்ணன் தனது கூட்டாளிகளுடன் வெட்டி கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுபஹாஷினி, கோபிகிருஷ்ணன், ஆனந்த் பாபு (வயது 22), 2 பள்ளி மாணவர்கள் என 5 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement