அரசியல் தமிழகம்

சசிகலா உயிருக்கு ஆபத்து.! துரோகம் நடக்கிறது.! சந்தேகம் கிளப்பும் சசிகலாவின் சகோதரன்.!

Summary:

சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக சந்தேகமாக இருக்கிறது என சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் திடீரென நேற்று மாலை சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.

தற்போது இதுகுறித்து சசிகலாவின் தம்பி திவாகரன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று எங்களுக்கு 20-ஆம் தேதி தகவல் வந்தவுடன் எனது மகன் ஜெய்ஆனந்த் மற்றும் உறவினர்கள் பெங்களூரு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சலில் இருந்துள்ளார். 

சிறையில் அவருக்கு சரியான சிகிச்சையளிக்கவில்லை.அவருக்கு 20 ம்தேதி மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான், வழக்கமாக சிறை கைதிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சசிகலாவிற்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும். வெறும் எக்ஸ்ரே மட்டுமே எடுத்துள்ளார்கள் என்று அவரது தம்பி திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.


Advertisement