ஒன்றரை வயது மகளின் இறப்பதை தாளாமல் தாய் மாயம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

ஒன்றரை வயது மகளின் இறப்பதை தாளாமல் தாய் மாயம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!


Dharmapuri 19 Aged Married Woman Missing After His Baby Death Feeling Sad

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர், கொங்கராபட்டி ஊராட்சி கால்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் குமார். இவரின் மனைவி ஜெயஸ்ரீ (வயது 19). தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய தர்ஷா என்ற குழந்தை இருந்துள்ளார். 

இந்த பச்சிளம் குழந்தை கடந்த மாதத்தில் இறந்துவிட்ட நிலையில், துக்கம் தாளாது தாயார் ஜெயஸ்ரீ தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், மன உளைச்சலில் பித்துப்பிடித்தார் போல இருந்த ஜெயஸ்ரீ, கடந்த 28 ஆம் தேதி வீட்டினை விட்டு வெளியேறி இருக்கிறார். 

Dharmapuri

அவர் எங்கு சென்றார்? என்பது குறித்த விபரம் தெரியாததால் அருண் குமார் மற்றும் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் அருண்குமார் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் மனைவியை கண்டறிந்து தரக்கூறி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.