மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
டிஜிபி-யின் ஆப்ரேஷன் மின்னல் வேட்டை.! ஓடி ஒழியும் ரவுடிகள்.! 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகளை தட்டி தூக்கிய போலீஸ்.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும், கூலிப்படை நடமாட்டம் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நேற்று முன்தினம் போலீசார் நடத்திய மின்னல் ரவுடி வேட்டையில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீண்டும் தலைமறைவாகினர். போலீசார் தொடர்ந்து நேற்றும் மின்னல் ரவுடி வேட்டையில் ஈடுபட்டனர். தமிழக டிஜிபி-யின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள். 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பல ரவுடிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதி உள்ள ரவுடிகளிடம் காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. இதன் பிறகு எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என அவர்கள் காவல்துறையிடம் எழுதி கொடுக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் உறுதிமொழியை மீறும்போது, அவர்களை சிறையில் அடைக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் 331 ரவுடிகள் சிறையில் அடக்கப்பட்டு உள்ளனர். பிடிபட்டவர்களில் 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.