திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு திடீர் தடை.! காரணம் இதுதான்!!

திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு திடீர் தடை.! காரணம் இதுதான்!!



Devotees not allowed to bath in thirucenthur sea

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்வது திருச்செந்தூர். இந்த தலம் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தில் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடிவிட்டு கடவுளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மேலும் தற்போது கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அங்கு பக்தர்களுக்கு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை தலைநகரமான கொழும்புவில் இருந்து சுமார் 1,326 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், கடல் பகுதியில் காற்றின் வேகம் பெருமளவில் அதிகரித்துள்ளதாலும் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.