வாட்டி வதைத்த வறுமை... மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்..!

வாட்டி வதைத்த வறுமை... மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்..!


Desperate poverty... The incident where the mother killed her daughter and committed suicide..!

நாகை மாவட்டம் பள்ளிபாளையம் சவேரியார் கோவில் தெருவிலுள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஜம்புகேசவன் - மகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ரோகித், அப்ஸனா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஜம்புகேசவன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து மகேஸ்வரி நாகை நகராட்சியில் உள்ள ஒரு அலுவலகத்தில் தற்காலிக களப்பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் போதுமான வருமானம்  இல்லாத காரணத்தால் குடும்பத்தை நடத்த முடியாமல் மகேஸ்வரி தவித்து வந்துள்ளார். இதனால் மகன் ரோகித்தை தனது உறவினர் வீட்டிலும் மகள் அப்ஸனாவை தன்னுடனும் வைத்து வளர்த்து வந்துள்ளார்.

poverty

இந்நிலையில் நேற்று காலை மகேஸ்வரி நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரி வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மகேஸ்வரியும் அவரது மகள் அப்சனாவும் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் இருந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வறுமையின் காரணமாக அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. வறுமையின் காரணமாக தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.