தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு... இன்று தொடங்குகிறது முன்பதிவு..! யாரும் மறந்துடாதீங்க.!Deebavali bus ticket reservation started

இந்த வருடம் அக்டோபர் 24-ஆம் தேதி உலகெங்கும் உள்ள தமிழர்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செல்வார்கள். ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்டுக்கள் முடிவடைந்தது.

அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள்.

அந்தவகையில் அக்டோபர் 21- ஆம் தேதிக்கான ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.