தமிழகம்

பூட்டிய வீட்டிற்குள் தாத்தா, தாயின் சடலத்துடன் வசித்து வந்த 17 வயது சிறுவன்.! திடீரென வந்த போன் கால்! கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்.

Summary:

Death thirupur

திருப்பூர், காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகரைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவரது மகள் அபர்ணாவை அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமாகிய அபர்ணாவுக்கு ஜிதின் என்ற 17 வயது மகன் இருந்த நிலையில் திடீரென அபர்ணாவின் கணவர் இறந்துள்ளார். 

அதன் பிறகு தனது மகனை அழைத்து கொண்டு அபர்ணா தனது தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப நடத்த கூட முடியாத ஏழை நிலையில் அனைவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் வறுமையின் காரணமாக அபர்ணா மகனை கூட பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார். 

இந்நிலையில் ஒரு நாள் திடிரென அபர்ணாவின் தாய் இறந்துள்ளார். தாயின் இறுதி சடங்கிற்கு கூட வழியில்லாமல் இருந்த அபர்ணாவிற்கு அக்கம்பக்கத்தினர் பண உதவி செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர். இதனால் மேலும் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார் அபர்ணா. 

ஒரு நாள் அபர்ணா தனது மகன் ஜிதினிடம் பேசி கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து இறந்துள்ளார். அதனை பார்த்த அபர்ணாவின் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த 17 வயது சிறுவன் சில தினங்கள் தாய் மற்றும் தாத்தாவின் சடலத்துடன் இருந்து வந்துள்ளான். 

அதனை அடுத்து தனது தாத்தாவின் மொபைல் போனின் மூலம் தனது தாய்மாமனுக்கு போன் செய்து தான் தற்கொலை செய்யவிருப்பதாக கூறி போனை ஆப் செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளான். அவர்கள் வந்த பார்த்த போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. 

போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்கும் அனுப்பியுள்ளனர். மேலும் திவீர விசாரணையிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement