தமிழகம்

வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வந்த துர்நாற்றம்..! அழுகிய நிலையில் கிடந்த மகன்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.

Summary:

Dead body found in terrors after 4 days of death

தூத்துக்குடியில் வீட்டின் மாடியில் இருந்து 19 வயது இளைஞர் ஒருவரின் உடல் அழுகியநிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி எவரெஸ்ட்மேரி. இவர்களுக்கு சஞ்சய் என்ற 19 வயது மகன் ஒருவர் இருந்துள்ளார். 19 வயதில்லையே குடிக்கு அடிமையான சஞ்சய் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்யவே தந்தையும் - மகனும் நீண்ட நாட்களாக ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருந்துவந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக சஞ்சய் வீட்டிற்கு வரவில்லை, அவரைப்பற்றிய எந்த தகவலும் இல்லை. சஞ்சய் மாயமானதை அடுத்து அவரது பெற்றோரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இதனிடையே குமார் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் கூறவே, மாடிக்கு சென்று பார்த்தபோது சஞ்சய் இறந்து, உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை காணவில்லை என சஞ்சய்யின் தந்தை கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement