தமிழகம் சினிமா

பிரதமர் மோடி கூறியதை தட்டாமல் தனது இரண்டு மகளுடன் செய்த நடிகை தேவயானி.! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Davaiyani

கொரோனா வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பல ஆயிர கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து போராட வேண்டும் என்றும் பாரத பிரதமர் மோடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

அதன் படி நேற்று மக்கள் அனைவரும் சேர்ந்து காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும், சரியாக ஐந்து மணிக்கு அவரவர் வீட்டில் இருந்தபடியே, வெளியில் வந்து கைதட்டியும், மணி ஓசை எழுப்பியும், மக்களின் உயிரை காப்பாற்ற போராடி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இதனால் நேற்று மக்கள் கூட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அதுமட்டுமின்றி மாலை 5 மணிக்கு அனைவரும் தங்களது வீட்டிற்கு வெளியே வந்து கைத்தட்டி தங்களது நன்றிகளையும், பாராட்டுகளை வெளிப்படுத்தினர்.

அதேபோல் நடிகை தேவயானி தனது இரண்டு மகள்களுடன் வீட்டிற்கு வெளியே வந்து மணிஓசை எழுப்பியும், கைதட்டியும் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 


Advertisement