தமிழகம்

நள்ளிரவில் ஆக்ரோஷமாக தந்தையின் தலையில் ஆட்டுகல்லை போட்டு கொன்ற மகள்! வெளியான நடுநடுங்கவைக்கும் காரணம்!

Summary:

daughter killed father in salem district

மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவத்தூரில் வசித்து வந்தவர் படவெட்டி . கூலி தொழிலாளியான இவரது மனைவி நளா. இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான படவெட்டி வேலைக்கு செய்யாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் தான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்நிலையில் படவெட்டி நள்ளிரவில் தலையில் கிரைண்டர் கல் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வேண்டும் போலீசார்கள் படவெட்டியின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

murderக்கான பட முடிவுகள்

அதனை தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது மதுபோதையில் வீட்டிற்கு வந்த படவெட்டி தனது மூத்த மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், போராடிய மகள் வேறுவழி இல்லாமல் ஆட்டுக் கல்லை தூக்கி தந்தையின் தலையில் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து படவெட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


Advertisement