தமிழகம்

தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற கர்ப்பிணி இளம்பெண்! வெளியான பதறவைக்கும் சம்பவம்!

Summary:

Daughter killed father in family issue

கல்பாக்கம் அருகே வடபட்டினம் என்ற பகுதியில் வசித்து வந்தவர்கள் சேகர்- ஏகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில்  இரண்டாவது மகள் நந்தினி. 19 வயது நிறைந்த இவருக்கு அருணகிரி என்பவருடன் திருமணமான நிலையில் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நந்தினி முதல் பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நந்தினியின் தந்தை சேகருக்கும்,  தாய் ஏகவள்ளிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவ்வாறு நேற்றும் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த நந்தினி தந்தையை கண்டித்துள்ளார். இதனால் சேகருக்கும், நந்தினிக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் தகராறு முற்றியநிலையில், நந்தினி ஆத்திரமடைந்து அருகில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சற்றும் எதிர்பாராதநிலையில்  தனது தந்தை சேகரின் மார்பில் குத்தியுள்ளார். இந்நிலையில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்த சேகரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  வழக்குப்பதிவு செய்து நந்தினியையும், அவரது தாய் ஏகவள்ளியையும் கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement