மாமியாரை மடக்கிப் பிடித்து தலையில் கடித்த மருமகள் - தலையில் 6 தையல்! வினோத சம்பவம்!

மாமியாரை மடக்கிப் பிடித்து தலையில் கடித்த மருமகள் - தலையில் 6 தையல்! வினோத சம்பவம்!Daughter in law bite mother in law at pollachi

குடும்ப தகராறு காரணமாக மாமியாரை மருமகள் தலையில் கடித்துல சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளச்சி உடுமலை சாலையில் உள்ள மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி 62 பத்திர எழுத்தர்.

இவரது மகன் சரவணகுமார் 38 என்பவரும், முன்பு சின்னாம் பாளையத்தை சேர்ந்த கல்பனா என்ற பெண்ணும் கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துள்னனர். திருமணம் ஆன நாளில் இருந்து சரவணகுமார் குடித்துவிட்டு மனைவியை கொடுமை படுத்தியுள்ளார்.

இதில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதில் சரவணகுமார் மனைவியுடன் கோவித்துக்கொண்டு தனது தாய் நாகேஸ்வரி வீட்டிற்கு சென்றுவிடுவார். இதனால் கல்பனா நாகேஸ்வரியுடன் வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Crime

பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதானதை அடுத்து நாகேஸ்வரி இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் கல்பனா மீது புகார் கொடுத்துள்ளார்.  தன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறக் கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மாமியார் - மருமகள் இடையே இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த கல்பனா தனது மாமியாரை தாக்கியதோடு அவரது தலையில் பலமாக கடித்துவிட்டு தப்பியுள்ளார்.

இதில் நாகேஸ்வரிக்கு தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது. மேலும், நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கல்பனாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.