இந்தியா

கொடூரத்தின் உச்சம்! ஆபாச படங்களை காண்பித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை!

Summary:

daughter complient on father

புதுச்சேரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நபர் ஒருவர் போதை மருந்துக்கு அடிமையாகி இருந்துள்ளார். அவருக்கு திருமணமாகி 19 வயதில் மகள் உள்ளார். அவரது மகள் கல்லூரியில் படித்துவந்துள்ளார். இந்தநிலையில் இவர் தனது மனைவி மற்றும் மகள் முன் அடிக்கடி செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 

கணவன் செய்யும் கேவலமான செயலை அவரது மனைவி கண்டித்துள்ளார். ஆனால் அவர் ஆபாச படங்களை தனது மனைவி மற்றும் மகளையும் பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆபாச படங்களை காண்பித்து மனைவியிடம் அவர் பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த அவரது தாய் கண்விழித்து கணவரின் செயலை கண்டித்து தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசாமி தனது மனைவியை தாக்கியுள்ளார். தட்டிக் கேட்ட மகளையும் அடித்துள்ளார். இதனால் காயமடைந்த தாய் மற்றும் மகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

ஒருகட்டத்தில் தந்தையின் கொடூர செயல்களை தாங்கிக்கொள்ள முடியாத அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த ஆச்சாமி மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Advertisement