தமிழகம்

இரவு 11 மணி..! செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மகள்.! தந்தை சொன்ன ஒற்றை வார்த்தையால் அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

Daughter commit suicide for father scold to using cell phone

இரவு 11 மணிவரை செல்போன் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் இளம் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். அச்சகம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு ராணி என்ற மனைவியும், பிரசாந்த் என்ற மகனும், ரக்‌ஷா என்ற மகளும் உள்ளனர். பிரசாந்த் எஞ்சினியர் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. 

இவரது மகள் ரக்‌ஷா, சேலத்தில் உள்ளார் மகளிர் ஒன்றில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இந்நிலையில் தனக்கு செல்போன் வேண்டும் என்று ரக்‌ஷா நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் கேட்டுள்ளார். மகளின் ஆசையை நிறைவேற்றிய தந்தை அவருக்கு புதிதாக அண்ட்ராயிட் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரக்‌ஷா நீண்ட நேரமாக செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதனை பார்த்த தந்தை இரவு பதினோரு மணி வரை செல்போனில் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த ரக்‌ஷா தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மறுநாள் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரக்‌ஷா சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தந்தை திட்டியதுதான் ரக்‌ஷாவின் மரணத்திற்கு காரணமா? அல்லது, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.


Advertisement