அடப்பாவமே! போதையில் மது என்று நினைத்து தற்பன் திரவத்தை குடித்த புது மாப்பிள்ளை பலி.. கதறும் உறவினர்கள்..!



Damn it! New bridegroom dies after thinking it was alcohol and drank the liquid.. Screaming relatives..!

சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள வெண்பாக்கம் பகுதியில் மணிகண்டன் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டன் ஒரு தனியார் கம்பனியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் மணிகண்டன் குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லபடுகிறது.

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டனின் மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த சண்டையில் மணிகண்டனின் பாக்கெட்டில் இருந்து இரண்டு மது பாட்டில்கள் கீழே விழுந்ததை அவர் கவினிக்காமல் இருந்துள்ளார்.

New bride groom

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து போதையில் இருந்த மணிகண்டன் மது பாட்டில் என நினைத்து வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வைத்திருந்த தர்பன் என்கிற வேதியல் திரவத்தை குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனே மணிகண்டன் கையில் இருந்த பாட்டிலை வாங்கி தூக்கி எறிந்துவிட்டு அழுது சத்தம் போட்டுள்ளார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மணிகண்டனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். 

மேலும் திருமணம் ஆன சில நாட்களேயான புது மாப்பிள்ளையானா மணிகண்டன் போதையில் மது என்று நினைத்து வேதியல் திரவத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.