இந்தியா

மகனை தலைகீழாக கட்டி தொங்க விட்டு அடித்த தந்தை! வீடியோவை பார்த்துவிட்டு விரைந்து சென்ற போலீசார்!

Summary:

dad attacked his son

உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில், தன் மகனைத் தாக்கி கிராம மக்களின் முன்னிலையில் கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்ட தந்தையின் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நேற்று முன்தினம் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஒரு வீட்டின் ஜன்னலில், கயிற்றால் ஒரு சிறுவன் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கிறான். அவனை, கிராம மக்கள் முன்னிலையில் ஒருவர் சரமாறியாக தாக்குகிறார். ஈவு, இரக்கமின்றி அச்சிறுவன் தாக்கப்படுவதை அப்பகுதி மக்களும் வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த வீடியோவில் சிறுவன் கதறி அழுகிறான்.

இதனையடுத்து ஆக்ரா போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அவர் விசாரணையின் பொது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என போலீசார் தெரிவித்தனர். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகனை தான் அவர் கயிற்றில் தலைகீழாகக் கட்டி கடுமையாக தாக்கியுள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement