
dad abused daughter's friend
சென்னை, திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மன் சேகர். 54 வயதான அவர், கற்பூரம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கழுத்து அறுபட்ட நிலையில், இருசக்கர வாகனத்துடன் சாலையில் அவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சேகரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் பவித்ரா என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
விசாரணையில் அந்த பெண் கூறுகியில், நான் பி.காம் படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தேன். என்னுடைய தோழியின் அப்பாதான் அம்மன் சேகர். தோழியைச் சந்திக்க அவர்கள் வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன். அப்போது தோழியின் அப்பா என்பதால் அங்கிள் என்ற உரிமையோடு அவருடன் பழகினேன்.
இந்தநிலையில் பவித்ராவுக்கும், சேகருக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், பவித்ராவுக்கு திருமண ஏற்பாடு நடந்ததால் பவித்ரா சேகருடனான தவறான உறவை முறித்துக் கொண்டு, வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆனால், இதற்கு சேகர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும்போது செல்போனில் எடுத்த வீடியோக்களை காட்டி பவித்ராவை அவர் மிரட்டி வந்துள்ளார். ஒருகட்டத்தில் வேறு வழியின்றி அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் பவித்ரா.
இந்தநிலையில் அம்மன் சேகர், தமது பிறந்த நாளன்று பவித்ராவை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றோம். அப்போது, பிறந்த நாள் கிஃப்ட் கொடுக்கப் போறேன்னு கண்ணை மூடுங்கள் என கூறி முகத்தில் ரசாயனப்பொடியை தூவி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். ஆரம்பத்தில் எனது வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்தார்கள். ஆனால் நான் கேட்கவில்லை, அதனால் இப்போது கஷ்டப்படுகிறேன் என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement