ஆசை ஆசையாக முகநூல் நண்பனை பார்க்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

ஆசை ஆசையாக முகநூல் நண்பனை பார்க்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!


cuddalore-youth-extorted-money-visiting-facebook-friend

கடலூர் நகரில் உள்ள மோகன் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ்(24).இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வாஞ்சிநாதன்(20) என்பவருக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர்.

இரண்டு நண்பர்களும் நீண்ட நாட்களாக போனில் பேசி வந்த நிலையில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதனை அடுத்து சந்தோஷை, வாஞ்சிநாதன் தனது கிராமத்திற்கு அழைத்துள்ளார். சந்தோஷம், வாஞ்சிநாதனை சந்திக்க குயிலாப்பாளையம் வந்துள்ளார்.

Visit Facebook friend

அந்நேரத்தில் வாஞ்சிநாதன் வீட்டில் இல்லாததை அடுத்து அருகில் இருக்கும் முந்திரி தோப்பிற்கு வருமாறு சந்தோஷை வாஞ்சிநாதன் அழைத்துள்ளார். ஆசை ஆசையாக நண்பனை பார்க்க முந்திரி தோப்பிற்கு சென்ற பிறகுதான் தெரிந்துள்ளது வஞ்சிநாதன் ஒரு திருடன் என்று.

அங்கு வாஞ்சிநாதனும் அவனது நண்பர்கள் மூவரும் சேர்ந்து சந்தோஷை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதனையடுத்து போலீசார் வாஞ்சிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இந்த மூவரும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் நண்பர்களாக நடித்து அடிக்கடி இதுபோல் கொள்ளையடிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.