கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பூசாரி.. பதறிப்போன பொதுமக்கள்..!

கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பூசாரி.. பதறிப்போன பொதுமக்கள்..!Cuddalore Poosaru Suicide

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நெய்வேலியில் உள்ள நாக கன்னியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். 

நேற்று மாலை 4 மணி அளவில் ஆறுமுகம் கோவிலுக்குச் சென்ற நிலையில், அங்கு தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். உள்ளூர் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது தொடர்பான கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.