மகளை பார்க்க சென்ற போது சோகம்.. பனைமரத்தில் மோதி கோர விபத்து.. 3 பேர் பரிதாப பலி.!

மகளை பார்க்க சென்ற போது சோகம்.. பனைமரத்தில் மோதி கோர விபத்து.. 3 பேர் பரிதாப பலி.!


Cuddalore Harbor Area Car Accident 3 Died

மகளை பார்க்க சென்னை வந்துகொண்டு இருந்த பெற்றோர், கடலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு, நீர்முளை பகுதியை சார்ந்தவர் ராமு (வயது 68). இவரின் மனைவி லலிதா (வயது 58). தம்பதி இருவரும் நேற்று நாளிரவு நேரத்தில் சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தனர். காரை சென்னை ஆவடி பகுதியை சார்ந்த ஓட்டுநர் கொந்தண்டம் (வயது 50) என்பவர் ஒட்டியுள்ளார். 

இவர்களின் கார் இன்று அதிகாலை 5 மணியளவில், கடலூர் பச்சையாங்குப்பம் பகுதி அருகே சென்றுகொண்டு இருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இந்த விபத்தில், காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. விபத்தில், சம்பவ இடத்திலேயே லலிதா மற்றும் கார் ஓட்டுநர் கோதண்டம் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Cuddalore

ராமு மட்டும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், கடலூர் துறைமுகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ராமுவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட ராமு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கடலூர் துறைமுகம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை பார்க்க புறப்பட்டு சென்ற பெற்றோர் மற்றும் கார் ஓட்டிய ஓட்டுநர் விபத்தில் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.