தந்தையுடன் ஜாலி டிரிப் சென்றதில் சோகம்.. ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்.!

தந்தையுடன் ஜாலி டிரிப் சென்றதில் சோகம்.. ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம்.!


Cuddalore baby died

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, அங்குச்செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்தாசன். இவர் வீடு வீடாக ஆட்டோவில் சென்று பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். 

இந்நிலையில், சம்பவத்தன்று பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை சேகரிக்க சென்றவர், தனது மகள் ஆசினியையும் உடன் அழைத்து சென்றுள்ளார். 

தந்தையுடன் முன் இருக்கையில் அமர்ந்து குழந்தை பயணித்த நிலையில், பண்ரூட்டி சாலையில் எதிர்பாராத விதமாக குழந்தை தவறி சாலையில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தலையில் படுகாயத்துடன் அருகேயிருந்த மருத்துவமனையில் ஆசினி அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் தந்தை பெரும் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.