கொடுமையிலும் கொடுமை.. மணமேடையில் பார்க்க வேண்டிய உன்னை பிணவறையில் பார்க்க வைத்து விட்டாயே... கதறும் குடும்பத்தினர்..!

கொடுமையிலும் கொடுமை.. மணமேடையில் பார்க்க வேண்டிய உன்னை பிணவறையில் பார்க்க வைத்து விட்டாயே... கதறும் குடும்பத்தினர்..!


cruelty-and-cruelty-if-you-are-made-to-see-you-in-the-m

ராமநாதபுரம் மாவட்டம் புதூர் பகுதியில் வசித்து வருபவர் அலெக்சாண்டர். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அலெக்சாண்டர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அலெக்சாண்டர் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் அண்டகுடி அருகே வந்தபோது அவருக்கு எதிர் திசையில் வந்த கனரக வாகனம் ஒன்று அலெக்சாண்டர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது.

Road accident

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அலெக்சாண்டரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அலெக்சாண்டர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 10 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.