மாடுகளை குப்பை போல் ஏற்றிவந்த லாரி! 6 மாடுகள் உயிரிழப்பு! இந்துமுன்னணி அமைப்பினர் அதிரடி நடவடிக்கை!

மாடுகளை குப்பை போல் ஏற்றிவந்த லாரி! 6 மாடுகள் உயிரிழப்பு! இந்துமுன்னணி அமைப்பினர் அதிரடி நடவடிக்கை!


cows died in lorry


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் 25 க்கு மேற்பட்ட மாடுகளை வாங்கிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் அந்த மாடுகளை ஒரு லாரியில் அனுப்பிவைத்துள்ளார். 

அந்த லாரி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே லாரி வந்தபோது, புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி தலைவர் வீர.வடிவேல் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் லாரியில் குப்பை போல் மாடுகளை ஏற்றி செல்வதாகக்கூறி லாரியை மறித்து மாடுகளை இறக்கியுள்ளனர்.

cows

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் லாரியில் இருந்த மாடுகளை கீழே இறக்கினர். அப்போது 6 மாடுகள் இறந்த நிலையில் இருந்தன. இதனையடுத்து மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தவர்கள் மற்றும் லாரியை மறித்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதனையடுத்து அங்குள்ள அணைத்து மாடுகளையும் 2 லாரிகளில் ஏற்றி புதுக்கோட்டை நகராட்சி கால்நடைகள் பராமரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.