கர்ப்பிணி பசுவை தட்டி தூக்கிய கார்.! துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.!

கர்ப்பிணி பசுவை தட்டி தூக்கிய கார்.! துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.!


cow died in accident

அமைச்சர்கள் வெளியே செல்லும் வழியில் யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவுவது வழக்கம். அந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  பலமுறை உதவி செய்துள்ளார். ஒருமுறை திருச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார். இதனைப்பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் காரை விட்டு இறங்கி முதலுதவி செய்துவிட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

cow

அதேபோல் சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை, தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு பின்னர் அந்த நபரை மருத்துவமனைக்கு சென்றும் நலம் விசாரித்தார். இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர், விராலிமலை அருகே, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பசு மாடு ஒன்றினை, ஒரு கார் வேகமாக வந்து மோதிவிட்டது.

 இதனால், அந்த பசு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை தொடர்பு கொண்டு பேசி, விராலிமலை காவல் ஆய்வாளர் மற்றும் சுங்க சாவடி மேலாளர் அவர்களிடம் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை உடனடியாக சுங்க சாவடியில் நிறுத்தி காவல் நிலையம் கொண்டு வர உத்தரவிட்டார்.

cow

பின்னர் பசுவிற்கு காலில் கட்டு கட்டி, முதலுதவி செய்து கொண்டிருந்த பொழுதே பசு உயிரிழந்தது. கர்ப்பிணி பசு உயிரிழந்த சோகத்தில் இருந்த உரிமையாளர்களிடம் அமைச்சர் ஆறுதல் கூறி இழப்பீடு தொகை அரசு சார்பில் கிடைக்க வழி செய்து அங்கிருந்து கிளம்பினார்.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடப்பது இயல்பு, ஆனால்,கர்ப்பிணி பசு மாட்டின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் துளியும் மனசாட்சி இல்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் சென்று விட்டார், விலங்கோ, மனிதனோ ஒரு உயிர் உயிருக்கு போராடும் பொழுது எந்த சூழ்நிலையிலும் நிறுத்தி உதவி செய்வதே மனிதாபிமானம் என்பதை நிரூபித்துள்ளார் அமைச்சர்.