
Covai auto driver provide face mask for passengers
தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக முக கவசம் அளித்து வருகிறார் கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடூர கொரோனா வைரஸ் தற்போது 150 கும் மேற்ப்பட்ட உலக நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதுவரை 2 பேர் இந்தியாவில் உயிர் இழந்துள்ளனர்.
தமிழகத்திலும் இரண்டாவது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து தப்பிக்க, மாஸ்க் அணிந்து மக்கள் நடமாடுகின்றனர். பெரும்பாலான இடங்களில் மாஸ்க் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில், கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகவேந்திரா என்பவர், தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு முகக்கவசம் இலவசம் என ஒட்டியுள்ளார். அதை செயல் படுத்தும் விதமாக தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இலவசமாக முகக்கவசத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றார்.
ஆட்டோ ஓட்டுனரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.
Advertisement
Advertisement