தமிழகம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.!

Summary:

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். அவர் கொடுத்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதமான, 50 சதவீதத்தை வன்னியர்களுக்கு கொடுத்து விட்டால் மீதம் உள்ள சாதியினர் பாதிக்கப்படுவர் என்பதால் சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். மேலும், இதுகுறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement