தமிழகம் இந்தியா

ஓடும் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Summary:

Couples suicide in bus because of illegal relationship

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர் நயினார் 25. இவரது மனைவி இலக்கியா 22. இவர்களது மகள் ரஞ்சனா 2. இலக்கியா, மகளுடன் பெற்றோர் ஊரான உடன்குடி சென்றிருந்தார். நவம்பர் 5-ம் தேதி அங்கிருந்து கிளம்பியவர் வீடு வந்து சேரவில்லை. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து சாத்தான்குளம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. குழந்தையுடன் ஒரு ஆணும் பெண்ணும் அந்த பேருந்தில் ஏறினார். திடீரென்று அந்த ஜோடி மயங்கியுள்ளார்கள். அதை முதலில் பயணிகள் கவனிக்கவில்லை. பிறகு குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டும் கூட அந்த இருவரும் உறங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

Illegal love...couple Suicide

இதனால் சந்தேகமடைந்த பயணிகள் பேருந்து ஓட்டுனரிடம் விஷத்தை தெரிவிக்க, ஓட்டுனர் பேருந்தை நேராக மருத்துவமனைக்கே திருப்பினார். அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிறகு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பின்னர் தகவல் அறிந்து சும்மாவா இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடிகள் என்பதும் இறந்தது, தேடப்பட்டுவந்த இலக்கியாவும், அவரது, கணவரின் அண்ணன் மணிகண்டன்(27) என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு இடையே தவறான பழக்கம் இருந்துள்ளதும், பொலிசிற்கு புகார் சென்றதால் தற்கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன.


Advertisement