போக்குவரத்துக்கு காவலருடன் பயங்கர சண்டை!! காவல் நிலையத்தில் கண்ணீர்விட்டு அழுத நபர்.. வைரல் வீடியோ..



Couple Caught on Camera Threatening Traffic Constable in Tane viral video

நோ பார்க்கிங்கில் காரை நிறுத்தியது தொடர்பாக தமபதியினர் போக்குவரத்து காவலருடன் சண்டையிடும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மும்பையின் தானேவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமர் சிங் என்பவர் தனது மனைவியுடன் காரில் சென்றநிலையில், தனது காரை மீரா சாலையில் பார்க்கிங் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த போக்குவது காவலர் அமர் சிங்கின் கார் சக்கரத்தை பூட்டிவிட்டார்.

இதனை பார்த்த அமர்சிங் மற்றும் அவரது மனைவி போக்குவரத்துக்கு காவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். காவலரின் சட்டையை கிழித்துவிடுவதாக அமர்சிங் காவலரை மிரட்டியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிலரால் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டு இணையத்தில் வைரலானநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அமர் சிங் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர்.

காவல் நிலையத்திற்கு சென்ற அமர்சிங், அங்கு தரையில் அமர்ந்து கண்ணீர் சிந்தி அழுதுள்ளார். அந்த வீடியோ காட்சியும் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.