
Corono virus 3 persion affected in tamilnadu
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் டப்ளின் நகரில் இருந்து சென்னை வந்த 21 வயது மாணவருக்கு கடந்த 17 ம் தேதி விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது
Advertisement
Advertisement