தமிழகம்

பீதியை கிளப்பி சற்று நம்பிக்கையும் தரும் கொரோனா..! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் டிஸ்சார்ஜ்..!

Summary:

Corono today discharge count in tamilnadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 634 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

இன்று மட்டும் 639 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்றே ஒரே நாளில் 482 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.

ஒருபக்கம் கொரோனா தாக்கம் அதிகரித்தாலும், நம்பிக்கை தரும் விதமாக கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகருத்துவருகிறது. இன்றும் மட்டும் தமிழகத்தில் 634 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement