
Corono tamilnadu todays count and death count
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உலக அளவில் அதிக பாதிப்புகள்கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.
தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. சமீபகாலமாக ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 42,687 ஆக அதிகரித்துள்ளது.மொத்த உயிரிழப்பு 397 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement