தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா உறுதி..! மொத்த எண்ணிக்கை 11,224 ஆக உயர்வு..!

Summary:

Corono tamilnadu positive cases latest update

தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தமிழகத்திலும் அதன் தாக்கத்தை காட்டிவருகிறது. கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் 500 கும் குறைவாக இருந்த ஒருநாள் பாதிப்பு, இன்று மீண்டும் 600 ஐ தாண்டியுள்ளது. இன்றுமட்டும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 482 பேர் கொரோனாவால் பாதுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 78 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டு 4,172 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


Advertisement