தமிழகம்

இன்று ஒரே நாளில் 43 பேர் உள்ளே..! 46 பேர் வெளியே..! தமிழகத்தை சுழற்றி அடிக்கும் கொரோனா..!

Summary:

Corono tamilnadu current count and update

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை  1,520 பேர் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் குறைந்துவந்த எண்ணிக்கை நேற்று திடீரென மேலும் 105 பேருக்கு உறுதியானது. இந்நிலையில், நேற்றைவிட இன்று சற்று குறைந்து 43 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவந்த  46 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். மொத்தம் 17 பேர் கொரோனாவால் தமிழத்தில் உயிரிழந்துள்ளனர்.


Advertisement