தமிழகம்

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு..! மொத்த எண்ணிக்கை 6535 ஆக உயர்வு.!

Summary:

Corono tamilnadu and chennai count update

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் 100 கும் குறைவாக இருந்த பாதிப்புகள் தற்போது தினமும் 500 கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் 6009 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6535 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்னனர். அதேநேரம் இன்று மட்டும் 219 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை இன்றுமட்டும் 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3330 ஆக உள்ளது.


Advertisement