தமிழகம்

தாலி கட்டிய சிலமணி நேரங்களிலேயே, தனிமைப்படுத்தபட்ட புதுப்பெண்! வருத்தத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினர்!

Summary:

Corono syptoms found in new married bride

சேலம் மாவட்டம் கெங்கவல்லி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 26 வயது பெண் சென்னையில் ஷாப்பிங் மால் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அதே ஊரைச் சேர்ந்த 27 வயது நிறைந்த நபருடன் திருமணம் நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதனால் அப்பெண் தனது திருமணத்திற்காக இ - பாஸ் பெற்று சென்னையிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். அப்போது தலைவாசல் நத்தக்கரை சோதனைச்சாவடியில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பெண்ணிற்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. 

அதனை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி அவர்  அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் அவரது வீட்டை சுற்றி கிருமிநாசினிகள் தெளித்து தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலை முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன், மிகவும் எளிமையான முறையில் அவரது வீட்டில் திருமணம் நடைபெற்றது. பின்னர் சில மணிநேரத்திலேயே சுகாதாரத்துறை அதிகாரிகள் மணப்பெண் மற்றும்  மாப்பிள்ளையை அவரவர் வீட்டிற்கு அனுப்பி தனிமைப்படுத்தினர். மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement