தமிழகம் Corono+

தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்துவிட்ட கொரோனா..! அடுத்தடுத்து குறையும் பாதிப்புகள்.! குணமாகும் மக்கள்.!

Summary:

Corono positive cases reduced in tamilnadu

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை தடுக்கவும் அதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவும் அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 50 அல்லது 60 என இருந்த பாதிப்பு டெல்லி மாநாடு பிரச்சனைக்கு பிறகு பல மடங்கு அதிகரித்தது. தினமும் 90 , 100 என கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை கிடுகிடுவென 1000 தை தாண்டியது.

இன்றுவரை தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 1242 ஆக உள்ளது. இந்நிலையில், தினம் தினம் 90 , 100 என அதிகரித்துவந்த பாதிப்பு நேற்றுமுதல் சற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்று 31 பேர் மட்டுமே கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 38 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும் 112 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் ஈரோட்டில் டிஸ்சார்ஜ் ஆன 13 பேர் உட்பட இன்று மட்டும் மொத்தம் 37 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதனால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிகிறது.


Advertisement