தமிழகம் Covid-19

தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பா.? எதுவாக இருந்தாலும் பிரதமர்தான் முடிவு செய்யவேண்டும்.! தமிழக தலைமை செயலர் பேட்டி.!

Summary:

Corono lock down extend in tamilnadu latest news

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்குவரும்நிலையில், ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து அணைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் உரையாற்றினார். இதனிடையே ஒருசில மாநிலங்கள் ஏற்கனவே முழு ஊரடங்கை இந்த மாத இறுதி வரை நீடித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நாட்டிலையே அதிக பாதிப்பு கொண்ட இரண்டாவது மாநிலமாக இருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் இதுகுறித்த ஆலோசனையில் இன்று ஈடுப்பட்டார்.

முதல்வர் ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலர் சண்முகம் அவர்கள் கூறுகையில், ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மற்றொரு மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் அதனால் எந்த பலனும் இருக்காது.

மேலும், தமிழகம் அதிக பாதிப்பு கொண்ட இரண்டாவது மாநிலமாக இருப்பதால், தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பதை பற்றி பிரதமர்தான் முடிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், எத்தனை நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்ட வேண்டும் என்பதையும் பிரதமர்தான் கூறுவார். ஏற்கனவே கூறிய ஊரடங்கு முடியவடைய இன்னும் ஓரிரு நாட்கள் இருப்பதால் அடுத்த முடிவு பிரதமரிடம் இருந்து வரும் வரை காத்திருப்போம் என கூறியுள்ளார்.


Advertisement