தமிழகம் Covid-19

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா இறப்பு எண்ணிக்கை..! தமிழக உயிரிழப்புகள் 349 ஆக அதிகரிப்பு..! அச்சத்தில் மக்கள்..!

Summary:

Corono death rate increased in tamil nadu

கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த சில வாரங்களாக பலமடங்கு அதிகரித்துள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகம் இருந்தாலும் உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைவாக இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.

ஆனால், சமீபகாலமாக தமிழகத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 23 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது 349 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 10 கும் அதிகமானோர் உயிரிழந்துவருவது மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement