தமிழகம்

தமிழகத்தில் மேலும் இருவர் பலி! கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Summary:

Corono dead in tamilnadu

சீனாவில்  வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த கொடிய வைரசால் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. 

மேலும் தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை 1204 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242ஆக உயர்ந்துள்ளது. மேலும் 118 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில் கொரோனோவால் இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் இருவர்  உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது நபர், மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது மிக்க நபர் என இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.


Advertisement