தமிழகம்

குறையாத கொரோனா..! தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா.! 939 பேர் டிஸ்சார்ஜ்..! அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..!

Summary:

Corono chennai and tamilnadu current count

தமிழகத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருக்கும் நிலையில் இன்று மட்டும் 477 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மட்டும் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 6970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 332 பேருக்கு இன்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 71 இல் இருந்து 74 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement