தமிழகம்

ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி! தமிழகத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

Summary:

corono affected people counts in tamilnadu

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்காவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது எனவும் அனைவரும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகிறது. 

இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 லிருந்து  13,191 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனோவால் மேலும் 3 பேர் பலியான நிலையில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement